×

சென்னையில் குற்றவாளிகளைப் பிடிக்க களமிறங்கும் டிரோன்கள்: சூப்பர் போலீஸ் டிரோன்களைஅறிமுகம் செய்கிறது காவல்துறை..!!

சென்னை: குற்றவாளிகளை அடையாளம் காணவும், கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவும், கடலில் மூழ்கியவர்களை மீட்க செய்யும் சூப்பர் போலீஸ் டிரோன்களை சென்னை காவல்துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சென்னை சாஸ்திரி நகர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிரோன் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரோன்காவல் நிலையத்தில் 20 காவலர்கள் செயல்படுவர். இந்த 20 காவலர்களும் பொறியியல் பட்டதாரிகள் ஆவர். இந்த காவல் நிலையத்தில் வேலை பார்க்க விருப்பமுள்ள தகுதியான காவலர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கணினி மூலம் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்(செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிரோன்கள் பறக்கும் பொழுதே அவை படம் பிடிக்கும் காட்சிகளை ஆய்வுசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் பயன்படுத்தபடும் அதிநவீன 9 டிரோன்கள் ஒரே மாதிரியான மென்பொருட்கள் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் வரும் பொழுது அவர்கள் செல்லும் சாலையில் முன்கூட்டியே இந்த டிரோன்கள் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இன்னும் 15 நாட்களில் டிரோன்காவல்நிலையம் முன்னோட்டமாக செயல்பட உள்ளது. இதனை முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. 


Tags : Chennai, drones, police, intensity
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...